தமிழக செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் வழக்கு: ஜாமீனில் வெளிவந்த அஸ்வத்தாமன் வெளிநாடு தப்ப முயற்சி- விமான நிலையத்தில் கைது

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து அவர் பாங்காக் தப்பி செல்வதற்காக விமானத்தில் ஏற முயன்றபோது தனிப்படை போலீசார் மடக்கிபிடித்து கைது செய்தனர்.

சென்னை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். குற்றப்பத்திரிக்கையையும் போலீசார் இந்த வழக்கில் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளிவந்த அஸ்வத்தாமன் என்பவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அவரது நடவடிக்கைகளை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.நேற்று பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து அவர் பாங்காக் தப்பி செல்வதற்காக விமானத்தில் ஏற முயன்றபோது தனிப்படை போலீசார் மடக்கிபிடித்து கைது செய்தனர்.