சென்னை,
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு 2024ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி தனது வீட்டிற்கு அருகே படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் நாகேந்திரன், பொன்னை பாலு, அஸ்வத்தாமன், ஹரிஹரன், பிரதீப், அஞ்சலை, பொற்கொடி உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் நாகேந்திரன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறையில் உயிரிழந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 14 பேருக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை எதிர்த்து காவல்துறை மற்றும் ஆம்ஸ்ராங்கின் மனைவி பொற்கொடி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைகு வந்தது. அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஸ்வத்தாமன், ஹரிஹரன், பிரதீப் உள்பட 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது. மேலும், ஜாமீன் ரத்து செய்யப்பட்ட 12 பேரும் வரும் 6ம் தேதி சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் சரணடைய வேண்டுமென உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஆம்ஸ்ட்ராக் கொலை வழக்கில் அஞ்சலை, பொற்கொடி ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை கோர்ட்டு ரத்து செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.