சென்னை,
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அரசு மேல்முறையீட்டைத் திரும்பப் பெற்று, இவ்வழக்கை சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது,
அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: மேல்முறையீட்டை வாபஸ் பெற்று சிபிஐ விசாரணைக்கு தவெக அரசு ஒப்படைக்க வேண்டுமென நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது!
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் அரசியல் படுகொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை தமிழக காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை. மாறாக, கைது செய்யப்பட்ட சில குற்றவாளிகள் காவல்துறையால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்: பலர் தற்போது பிணையில் வெளிவந்துள்ளனர். படுகொலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும். இதுவரை முழுமையான மற்றும் நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.
இவ்வாறான நிலை உருவாகும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவரும். உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான செல்வி. மாயாவதி அவர்கள். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்தபோதே. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேபோல், அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மனைவி திருமதி. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களும் தொடக்கத்திலிருந்தே சிபிஐ விசாரணை கோரி வலியுறுத்தியதுடன். வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டது. ஆனால், திமுக தலைமையிலான அப்போதைய தமிழக அரசு அந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, சிபிஐ விசாரணைக்கு மாற்றும் உத்தரவுக்கு இடைக்காலத் தடையுத்தரவைப் பெற்றது.
இந்நிலையில், புதிதாக ஆட்சி அமைத்திருக்கும் தவெக தலைமையிலான தமிழக அரசின் தற்போதைய நிலைப்பாட்டை அடுத்த மாதம் (ஜூலை) நடைபெறவுள்ள விசாரணையின்போது தெளிவுபடுத்துமாறு உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. இந்நேரத்தில். தமிழக அரசு தனது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்று, இந்த வழக்கை தாமாக முன்வந்து சிபிஐ விசாரணைக்கு ஒப்படைப்பதே நீதிக்கும். சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கைக்கும் உரிய நடவடிக்கையாக இருக்கும். எனவே. அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.