தமிழக செய்திகள்

2-வது நாளாக பறந்த ராணுவ ஹெலிகாப்டர்

பழனியில் 2-வது நாளாக ராணுவ ஹெலிகாப்டர் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி பகுதியில் கடந்த சில நாட்களாக ராணுவ விமானம், ஹெலிகாப்டர் போன்றவை தாழ்வாக பறந்து வருகிறது. நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பழனி பஸ்நிலையம் மற்றும் நகர் பகுதியில் 2 முறை தாழ்வாக பறந்தபடி வானில் வட்டமடித்து சென்றது.

இந்நிலையில் 2-வது நாளாக நேற்றும் பழனி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் வட்டமடித்து பறந்தது. பழனியில் தொடர்ந்து 2 நாட்களாக ராணுவ ஹெலிகாப்டர் பறந்து சென்றதால் பொதுமக்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கோவை மாவட்டம் சூலூர் ராணுவ விமான பயிற்சி பள்ளியிலிருந்து ஹெலிகாப்டர் வந்து செல்கிறது என்றும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறினர்.

SCROLL FOR NEXT