தமிழக செய்திகள்

பொது இடத்தில் ஆபாசமாக பேசிய 2 பேர் கைது

குருபரப்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் கரடிகுறி மற்றும் கே.பூசாரிப்பட்டியில் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு குடிபோதையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசி கொண்டிருந்த மல்லிநாயணப்பள்ளி அருகே உள்ள கள்ளியூர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்ற திருப்பதி (வயது 27), கோனேகவுண்டனூர் ஜெய்நகர் பகுதியை சேர்ந்த ஜெயகுமார் (33) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

SCROLL FOR NEXT