தமிழக செய்திகள்

பெங்களூருவில் இருந்து சேலத்துக்குகாரில் கடத்திய ரூ.5 லட்சம் குட்கா பறிமுதல்வடமாநில வாலிபர் கைது

ஓசூர்:

பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு காரில் கடத்திய ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வாகன சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக காரில் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தப்படுவதாக அட்கோ போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபரிவேலன் மற்றும் போலீசார் ஓசூர் அருகே குமுதேபள்ளியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சுமார் 400 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் இருந்தவரிடம் விசாரித்ததில் அவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தீபக் ஜெய்ஸ்வால் (வயது 28) என்பது தெரியவந்தது.

கைது

மேலும் இவர் விற்பனைக்காக பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் குட்கா மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தததுடன், தீபக் ஜெய்ஸ்வாலையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT