தமிழக செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் கைது - கனிமொழி எம்.பி. கண்டனம்

அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை,

தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை போலீசார் தற்போது தஞ்சைக்கு அழைத்துச்செல்கின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும். ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க-வை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி, இப்படியான அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது. நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்.”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT