தமிழக செய்திகள்

சோனியா, ராகுல் வருகை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. இதில், தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த சூழலில், எதிர்பாராத அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தி.மு.க., தற்போது ஆதரவு தெரிவித்து உள்ளது.

இதைபோல காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது இந்தியா கூட்டணியினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி தன்னுடைய அதிருப்தியை தெரிவித்தது.

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சென்னைக்கு விரைந்துள்ளனர். இந்த சந்திப்பில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தி.மு.க. அளித்த ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்த உள்ளனர்.

இதனையடுத்து, தொகுதி மறுவரையறை தொடர்பாக ‘இந்தியா' கூட்டணி தலைவர்கள் சந்திக்க வர உள்ள நிலையில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, வில்சன் ஆகியோருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியா கூட்டணி தலைவர்கள் வருகை தர உள்ள நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT