தமிழக செய்திகள்

கலைஞரின் 103-வது பிறந்த நாள்: சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு வாழ்த்துப்பதிவு

தமிழை இலக்கிய இனிமையாக்கிய தொல்காப்பியத்தின் வாரிசு என்று அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

மறுமை இல்லை

என மக்களிடையே

பகுத்தறிவு

முழங்கிய முரசு!

மடமை கொடுமை

கண்டு

கொதித்தெழுந்த

கருத்தியல் அரசு!

இளமை வளமை

என அன்னைத்தமிழை

செம்மொழியாக்கிய

தமிழர் பரிசு!

தமிழை இலக்கிய

இனிமையாக்கிய

தொல்காப்பியத்தின்

வாரிசு!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.