சென்னை,
திமுக ஆட்சியில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது, போலீஸ் அகாடமி இயக்குநராக அருண் ஐபிஎஸ் இருந்து வரும் நிலையில், அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். கோவை மண்டல ஐஜி கண்ணனும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெம் வீரமணி விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி வருகிறது. 2024 ஆம் ஆண்டு முதல் 2026 தேர்தலுக்கு முன்பு வரை சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ்சிடம் ஜெம் வீரமணி விவகாரம் தொடர்பாக புகார் அளித்தாக ரஞ்சன் குமார் கூறியிருந்தார். இந்த சூழலில், அருண் ஐபிஎஸ் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.