தமிழக செய்திகள்

ஆசிய விளையாட்டு: மழையால் கிரிக்கெட் போட்டி ரத்து - அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

மழையால் ஆட்டத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

நகோயா,

ஆசிய விளையாட்டில் ஆண்கள் கிரிக்கெட் அணி (20 ஓவர்) நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றது. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி இன்று டார்விஷ் ரசூலி தலைமையிலான ஆப்கானிஸ்தானுடன் இன்று விளையாட இருந்தது. இந்த ஆட்டம் நிஷின் நகரில் அமைந்துள்ள கரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் ஸ்டேடியத்தில் நடக்க இருந்தது.

ஆனால் அங்கு தொடர்ந்து மழை பெய்தது. இதனால் ஆட்டத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி ரத்துசெய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் போட்டியை காண வந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

போட்டி ரத்தானாலும், இந்திய அணியே அரையிறுதிக்கு தகுதிபெற்றது. சர்வதேச டி20 தரவரிசையில் இந்தியா முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் 10வது இடத்திலும் உள்ளதால், தரவரிசையில் அடிப்படையில் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இந்திய அணி வருகிற 1-ந்ம் தேதி அரையிறுதிப் போட்டியில் விளையாடுகிறது.

கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், திலக் வர்மா, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் பட்டேல் என முன்னணி வீரர்கள் அனைவரும் களம் இறங்குவதால் இந்திய அணியின் கையே ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT