தமிழக செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டிகள்: பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்த வித்யா ராம்ராஜ்: அன்புமணி வாழ்த்து

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வித்யா பங்கேற்கவுள்ள பிற போட்டிகளிலும் பதக்கம் வெல்ல வாழ்த்துகள்.

சென்னை,

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான 400 மீட்டர் தடைத் தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

வாழ்த்துகள்

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டிகளில் தமிழக் வீராங்கனை வித்யா ராம்ராஜ் 54.75 வினாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பி.டி. உஷா

1984-ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் அப்போதைய இந்திய வீராங்கனையும், இப்போதைய இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவருமான பி.டி. உஷா 55.42 வினாடிகளில் 400 மீட்டர் தொலைவை தடை தாண்டி கடந்தது தான் இந்திய தேசிய சாதனையாக இருந்தது. கடந்த 42 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த பி.டி. உஷாவின் சாதனையை வித்யா முறியடித்திருப்பதற்கு எனது பாராட்டுகள்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வித்யா பங்கேற்கவுள்ள பிற போட்டிகளிலும் பதக்கம் வெல்ல வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT