சென்னை,
சாதனை படைத்திருக்கும் நமது தமிழகத்தின் தங்கம் சோலைராஜ் தர்மராஜுக்கு மாணிக்கம் தாகூர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கும் நமது தமிழகத்தின் தங்கம் சோலைராஜ் தர்மராஜுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் T44/T62/T64 பிரிவில் 7.15 மீட்டர் தூரம் தாண்டி, தங்கப் பதக்கம் வென்றதோடு புதிய ஆசிய சாதனையும் படைத்து ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
எல்லைகளை உடைத்தெறிந்து புதிய சாதனை படைத்துள்ள அவரது அயராத உழைப்பும் தன்னம்பிக்கையும் ஒவ்வொரு இளைஞருக்கும் சிறந்த உத்வேகம். மென்மேலும் பல உயரங்களை எட்டி நாட்டிற்கு தொடர்ந்து பெருமை சேர்த்திட நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.