சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் வருகிற 21-ந்தேதி மாலையுடன் முடிவடைகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் தலைவர்கள் சூறாவளியாக சுற்றுப்பயணம் செய்து தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.
கோடை வெயிலில் கொளுத்தும் அனலையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள் பிரசாரம் செய்து வருவதால் தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அதன்படி நேற்று தேசிய கட்சிகளின் தலைவர்களும் நேரில் வந்து பிரசாரம் செய்தனர்.
அந்த வகையில் இன்றும் தமிழகம் முழுவதும் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:-
மாலை 4 மணி - ஓசூர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, கரூர், ஈரோடு.
த.வெ.க. தலைவர் விஜய்:-
திருச்சி கிழக்கு.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:-
கீழ்வேளூர், நாகப்பட்டினம், நன்னிலம்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-
நெல்லை, பாளையங்கோட்டை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம்:-
பெரம்பலூர், குன்னம், உளுந்தூர்பேட்டை.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன்:-
விழுப்புரம், திண்டிவனம்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:-
மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:-
நன்னிலம் (குடவாசல்), வேதாரண்யம் (செம்போடை), கீழ்வேளூர் (பிராதாமபுரம்), மயிலாடுதுறை, பூம்புகார் (செம்பொனார்கோவில்)
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்:-
அவினாசி, கோவை தெற்கு.
பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார்:-
திருச்செந்தூர், ராதாபுரம், அம்பாசமுத்திரம்.
நடிகர் சத்யராஜ்:-
மாதவரம், கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, அம்பத்தூர், மதுரவாயல்