திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ராஜஸ்தான் மாநில சிறப்பு காவல் படையினர் அறிக்கை செய்துள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார், ராஜஸ்தான் சிறப்பு காவல் படையினர் தங்கி உள்ள இடத்திற்கு நேரடியாக சென்று அங்கு அவர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என்று அவர்களிடம் குறைகள் கேட்டறிந்து, அதனை சரி செய்ய அறிவுரை வழங்கினார்.
மேற்சொன்ன சிறப்பு காவல் படையினர், தாழையூத்து உட்கோட்டத்தில் தொடர்ந்து தேர்தல் சம்பந்தமான அலுவல்களில் ஈடுபட உள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வருகை தந்துள்ள சிறப்பு காவல் படையில் ஒரு துணை தளவாய் உள்பட 84 பேர் அறிக்கை செய்துள்ளனர்.