சென்னை,
தமிழகத்தில் வருகிற 23-ந்தேதி (வியாழக்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் வாக்குச்சாவடி முகவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பது குறித்து விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் Form 10-ஐ ஒரு வேட்பாளருக்கு 2 ஏஜெண்டுகள் தனித்தனியே பெற்று PO-விடம் கொடுக்க வேண்டும்.
PO முகவர்களுக்கு தனித்தனியே அடையாள அட்டை வழங்குவார்.
Ballot Unit-ல் உள்ள வேட்பாளர் வரிசையின்படி முகவர்கள் அமர வேண்டும்.
முகவர்கள் கட்டாயம் வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். (முகவர் அந்த வாக்குச்சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க வேண்டும்)
கரை வேட்டி கட்டலாம், ஆனால் சின்னம் இருக்கக்கூடாது.
ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் இருக்க வேண்டும்.
காலை 5.15-க்கு வாக்கு சாவடிக்கு வர வேண்டும்.
முகவரிடம் உள்ள வாக்காளர் பட்டியலை வாக்குச்சாவடிக்கு வெளியே எடுத்துச் செல்ல கூடாது.
தேர்தல் முடியும் கடைசி 2 மணி நேரத்திற்கு முகவர் வாக்குச்சாவடிக்கு வெளியே செல்ல அல்லது வாக்குச்சாவடிக்குள் வரவோ கூடாது.
வாக்குச்சாவடிக்குள் அரசியல் பேச கூடாது.