தமிழக செய்திகள்

சட்டசபை தேர்தல்: தமிழ்நாட்டில் முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்குமார்

தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

சென்னை,

தமிழக சட்டசபைக்கு ஒரேகட்டமாக இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்குவதற்கு முன்னதாகவே சென்னை திருவான்மியூரில் உள்ள பாரதிதாசன் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை பதிவு செய்தார்.

இதன்மூலம் தமிழ்நாட்டில் முதல் நபராக நடிகர் அஜித்குமார் வாக்களித்துள்ளார். பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவரை முன்னதாக வாக்களிக்க அதிகாரிகள் அனுமதித்தனர்.

வாக்களிக்க வந்த நடிகர் அஜித்குமார் வெள்ளை நிற கோட் சூட் அணிந்திருந்தார். வாக்களித்துவிட்டு கை விரலில் வைக்கப்பட்ட மை-யை நடிகர் அஜித்குமார் காண்பித்தார். நடிகர் அஜித்தை காண தொண்டர்கள் குவிந்து இருந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.