சென்னை,
தேசிய அரசியலில் எதிரும், புதிருமாக பா.ஜனதா- காங்கிரஸ் கட்சிகள் இருக்கின்றன. இதில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 27 இடங்கள் கிடைத்துள்ளன. இதில் விளவங்கோடு, ஊட்டி, குளச்சல் ஆகிய 3 தொகுதிகளில் பா.ஜனதாவும், காங்கிரசும் நேரடியாக மோதுகின்றன.
அதே போன்று காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள கிள்ளியூர் தொகுதி யில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவின் 'தாமரை' சின்னத்தில் த.மா.கா. போட்டியிடுகிறது. எனவே 4 தொகுதிகளில் காங்கிரசின் 'கை' சின்னமும், பா.ஜனதாவின் 'தாமரை' சின்னமும் மோதுகிறது.