தமிழக செய்திகள்

சட்டசபை தேர்தல்: அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் யார்..?

சென்னை மாதவரம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர், தி.மு.க. வேட்பாளரை 94,985 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

சென்னை,

நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர்கள் விவரம் வருமாறு:-

எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாரை 98,110 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

சென்னை மாதவரம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் விஜய் பிரபு, தி.மு.க. வேட்பாளர் எஸ்.சுதர்சனத்தை 94,985 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் ஜோசப் விஜய், தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகரை 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அம்பத்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் பாலமுருகன், தி.மு.க. வேட்பாளர் பூர்ணிமாவை 58,781 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளர் ரேவந்த் சரண், தி.மு.க. வேட்பாளர் கணபதியை 61,509 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பல்லாவரம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் ஜெ.காமாட்சி, தே.மு.தி.க. வேட்பாளர் முருகேசனை 54,693 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பொன்னேரி தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் டாக்டர் ரவி, காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகரை 55,768 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பூந்தமல்லி தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் பிரகாசம், தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணசாமியை 72,740 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

சேலம் கிழக்கு தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் எஸ்.லட்சுமணன், பா.ம.க. வேட்பாளர் எம்.கார்த்தியை 74,867 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

சோழிங்கநல்லூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் சரவணன், தி.மு.க. வேட்பாளர் அரவிந்த் ரமேஷை 96,780 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் கே.தென்னரசு, காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகையை 54,246 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

திருவொற்றியூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் என்.செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் எல்.சுந்தர்ராஜனை 53,564 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

திருப்பூர் வடக்கு தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வி.சத்யபாமா, அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனை 69,992 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

விராலிமலை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் விஜயபாஸ்கர், த.வெ.க. வேட்பாளர் பி.முருகேசனை 62,073 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.