கடலூர்,
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடந்த 12ஆம் தேதி மளிகைக் கடை ஊழியர் கண்ணதாசன் காணாமல் போனார். இந்தநிலையில் லிங்கா ரெட்டி பாளையத்தில் உள்ள கோவில் வளாகத்தில் கண்ணதாசனை கொன்று புதைத்து இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
விசாரணையில் மளிகைக் கடை ஊழியர் கண்ணதாசனை கொன்று புதைத்ததாக ஜோதிடர் கோபிநாத்தை போலீசார் கைது செய்தனர். ஜோதிடர் கோபிநாத்தின் நண்பர் திருப்பதி, கண்ணதாசனின் கள்ளக்காதலி மஞ்சுளா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மளிகைக் கடை ஊழியர் கண்ணதாசன் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஜோதிடர் ஒருவரை கொன்று புதைத்தது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.