தமிழக செய்திகள்

ஏ.டி.எம் பணம் வரும் பாதையில் ஸ்டிக்கர் ஒட்டி திருட்டு: திரிபுராவைச் சேர்ந்த 2 பேர் கைது

ரூ.20 ஆயிரம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது.

சென்னை,

சென்னை புழல் கல்பாளையத்தில் ஒரு வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க வந்தார். ரூ.20 ஆயிரம் எடுப்பதற்காக ஏ.டி.எம். கார்டு மூலம் முயற்சித்தார். ஆனால் பணம் வரவில்லை. அதே வேளையில் ரூ.20 ஆயிரம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி வங்கி விநாயகபுரம் கிளையில் கேட்டார்.

வங்கி அதிகாரிகள் அந்த ஏ.டி.எம். குறித்து ஆய்வு செய்தபோது யாரோ மாம் நபர்கள் ஏ.டி.எம் எந்திரத்தில் பணம் வரும் பாதையில் ஸ்டிக்கர் ஒட்டி பணத்தை அபேஸ் செய்தது தெரிய வந்தது. ஏ.டி.எம்.மில் பணம் வரவில்லை என்று வாடிக்கையாளர்கள் சென்றதும் ஸ்டிக்கரை எடுத்து பணத்தை சுருட்டியுள்ளனர். மேலும் இதுபோல 4 வாடிக்கையாளர்களின் பணத்தை மர்ம நபர்கள் அபேஸ் செய்துள்ளனர். இது தொடர்பாக வங்கி கிளை மேலாளர் விஜயலட்சுமி புழல் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் செய்தார்.

கைது

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அங்குள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ராஜிப் ஆலம் (வயது 30) மற்றும் நியாஸ் உதின் (22) ஆகிய 2 பேர் இந்த நூதன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான 2 பேர் மீதும் சோழவரம் காவல் நிலையத்தில் இதே போன்று திருட்டு வழக்கு உள்ளது என்பது 5 குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT