தூத்துக்குடி,
தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் காங்கிரஸ் தலைவரின் தந்தைய அவரது வீட்டிற்குள் புகுந்து தாக்கிய தி.மு.க. நிர்வாகியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி முள்ளக்காடு அருகே உள்ள நேசமணிநகரைச் சேர்ந்தவர் மரியவின்சென்ட் (வயது 72). இவர் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜின் தந்தை ஆவார். சமூக ஆர்வலரான மரிய வின்சென்ட் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் மதுபான கடைகள் மூடப்பட்ட பின்னரும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
இதனை அறிந்த நேசமணிநகரை சேர்ந்த பொன்கற்பகராஜ்(35) என்பவர் மரியவின்சென்ட் வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தி.மு.க. நிர்வாகி பொன்கற்பகராஜை போலீசார் வலைவீசி தேடி வருகினறனர்.