திருச்செந்தூர்,
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரி டெல்லியில் போராட்டம் நடத்திய சிபிஐ(எம்) இடதுசாரி தலைவர்கள் மீதான தாக்குதல், கைது நடவடிக்கைகளை கண்டித்து திருச்செந்தூரில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
13 கோடி வாக்காளர்களின் வாக்குரிமை திருட்டுக்கு காரணமான தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரி டெல்லியில் போராடிய சிஐடியு, சிபிஐ(எம்) இடதுசாரி தலைவர்கள் மீது தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகளை கண்டித்து சிஐடியு சார்பில் நேற்று திருச்செந்தூரில் தியாகி பகத்சிங் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்ட துணை செயலாளர் குன்னி மலையான் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட துணை தலைவர் சந்திரா, மாவட்ட துணை செயலாளர்கள் அந்தோணி நிக்ஸன், ராமய்யா, சிபிஐ(எம்) ஒன்றிய செயலாளர் திருச்செந்தூர் முத்துக்குமார், சிபிஐ(எம்) ஆழ்வார் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி பன்னீர்செல்வம், மின்சார ஓய்வூதியர் சங்க தலைவர் ஜெயபாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜெபராணி, ஹேமலதா, துரைராஜ், ஸ்டேன்லி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.