சென்னை,
தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
கும்பகோணத்தில் தவெக நிர்வாகிகள் இருவர் சாலையை மறித்து வைத்த பேனரை அகற்றுமாறு கூறிய போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலரின் கையை உடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. முன்பிருந்த ஆட்சியில் தமிழக மக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் தான் பாதுகாப்பற்ற சூழல் நிலவியது.
ஆட்சி மாறினால் நிலைமை மாறிவிடும் என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கைக் காக்கும் காவலர்கள் மீதே தாக்குதல் நிகழ்த்தும் அளவிற்கு தவெக-வில் குண்டர்கள் உருவாகி வருவது இந்த ஆட்சியிலும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு எந்த அளவிற்கு உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு.
முன்பெல்லாம் காவல்துறையினரைக் கண்டாலே பயந்த காலம் போய் இன்று புதிதாக முளைக்கும் ரவுடிகளாலும், குண்டர்களாலும் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டிருப்பது தான் வேதனை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.