தமிழக செய்திகள்

நிருபர் மீது தாக்குதல்: தவெக கண்டனம்

ஊடகச் சுதந்திரத்தை நசுக்கும் எந்தச் சக்தியையும் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என தவெக தெரிவித்துள்ளது.

சென்னை,

செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தவெக துணைப் பொதுச் செயலாளர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள கண்டன பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

”செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் பத்திரிகையாளர்கள் மீது திமுக எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலுக்குக் கடும் கண்டனம்!

கிருஷ்ணராபுரம் பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக நடைபெற்று வரும் கனிம வளக் கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற 'நியூஸ் தமிழ்' செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது நடத்தப்பட்ட கோரமான தாக்குதல் அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் சட்ட விரோத முறைகேடுகள் நடப்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயன்ற ஊடகவியலாளர்களை, ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி அவர்கள் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கியிருப்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப் போற்றப்படும் ஊடகத்துறையின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும்.

சட்ட விரோத முறைகேடுகள் நடப்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயன்ற ஊடகவியலாளர்களை, ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி அவர்கள் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கியிருப்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப் போற்றப்படும் ஊடகத்துறையின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதைச் சுட்டிக்காட்டும் இந்தச் சம்பவத்திற்குத் வன்மையான கண்டனங்கள். ஊடகச் சுதந்திரத்தை நசுக்கும் எந்தச் சக்தியையும் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். மறக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT