கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

காரை முற்றுகையிட முயற்சி: அதிமுக நிர்வாகிகள் 9 பேரை பதவி நீக்கம் செய்த எடப்பாடி பழனிசாமி

காரை முற்றுகையிட முயன்ற அனைவரும் முன்னாள் அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்கள் என்பது தெரியவந்தது.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை அடையாறில் உள்ள இல்லத்திற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். வீடு அருகே வந்தபோது, அவரது காரை அதிமுக நிர்வாகிகள் சிலர் தடுத்து நிறுத்தி முற்றுகையிட முயன்றனர்.

மாவட்ட செயலாளர் ஆதிராஜாராமுக்கு எதிராக கோஷமிட்ட அவர்களை வீட்டிற்குள் அழைத்து, அவர்களது கோரிக்கை என்ன என்பதை எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்து மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

காரை முற்றுகையிட முயன்ற அனைவரும் முன்னாள் அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்கள் என்பது தெரியவந்தது. மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராமுக்கு எதிராக இவர்கள் கோஷ்டியாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. தேர்தல் நேரத்தில் இதுபோன்று கோஷ்டியாக செயல்படுவதை அனுமதிக்க முடியாது என்று கருதிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டார்.

இதுதொடர்பாக, எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட மகளிரணி இணை செயலாளர் ஏ.மகாலட்சுமி, ஆயிரம் விளக்கு தெற்கு பகுதி துணை செயலாளர் மலர்விழி குமார், திருவல்லிக்கேணி கிழக்கு பகுதி எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கே.கலைவாணன், திருவல்லிக்கேணி மேற்கு பகுதி ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் பார்த்தாஸ் கே.கிருஷ்ணமூர்த்தி, சேப்பாக்கம் வடக்கு பகுதி ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் கே.இளங்கோவன், சேப்பாக்கம் தெற்கு பகுதி ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் மோகன் என்ற மோகனரங்கன், ஆயிரம் விளக்கு மத்திய பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜி.ராஜேஷ் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Also read:தமிழ்நாட்டில் விரைவில் 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்