சென்னை,
மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அம்ரித் பாரத் ரெயில், நெல்லை ரெயில் நிலையம் வந்தடையும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அம்ரித் பாரத் ரெயில் (வண்டி எண் 20603), நெல்லை வரும் நேரம் மாற்றியடைக்கப்படுகிறது. அதாவது, ஜல்பைகுரியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், நெல்லையை 3-வது நாள் இரவு 10 மணிக்கு வந்தடைந்தது.
செப்டம்பர் 23-ந் தேதி முதல் இந்த ரெயில் 10 நிமிடத்திற்கு முன்னதாக நெல்லை ரெயில் நிலையத்தை வந்தடையும். அதாவது, இரவு 9.50 மணிக்கு நெல்லை ரெயில் நிலையத்திற்கு வந்து, 5 நிமிடங்கள் கழித்து அங்கிருந்து புறப்பட்டு செல்லும். நாகர்கோவில் ரெயில் நிலையத்தை இந்த ரெயில் 5 நிமிடங்கள் தாமதமாக இரவு 11.05 மணிக்கு சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.