தமிழக செய்திகள்

பயணிகள் கவனத்திற்கு.. நெல்லையில் 27 ரெயில்களின் சேவை ரத்து

கோவை-நாகர்கோவில் உள்ளிட்ட15 ரெயில்கள் பகுதி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நெல்லை,

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் யார்டு மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் ரெயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, நேற்று நெல்லை- திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரெயில்கள், மறுமார்க்கமாக திருச்செந்தூரிலிருந்து வரும் ரெயில்கள், கன்னியாகுமரி திருநெல்வேலி ரெயில்கள் உள்பட மொத்தம் 27 ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, நெல்லை-செங்கோட்டை, நெல்லை-எழும்பூர், தாம்பரம்-கன்னியாகுமரி, கோவை-நாகர்கோவில் உள்ளிட்ட15 ரெயில்கள் பகுதி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே பயணிகள் தங்களது ரெயில் சேவையின் நிலையை சரிபார்த்துக்கொள்ள வேண்டுமென ரெயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.