சென்னை,
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில்-செங்கல்பட்டு ரெயில் நிலையங்களுக்கு இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.35 மணி முதல் மதியம் 12.05 மணி வரையிலும் (2 மணி நேரம் 30 நிமிடம்). இதேபோல நாளை (திங்கட்கிழமை) முதல் 16-ந்தேதி வரையில் மதியம் 1.20 மணி முதல் மாலை 3.20 மணி வரையிலும் (2 மணி நேரம்) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மின்சார ரெயில் மற்றும் பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* தாம்பரத்தில் இருந்து இன்று காலை 9.40 மணிக்கு விழுப்பரம் செல்லும் பயணிகள் ரெயிலும், காஞ்சீபுரத்தில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு சென்னை கடற்கரை வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
பகுதி நேர ரத்து
* விழுப்புரத்தில் இருந்து இன்று மதியம் 1.30 மணிக்கு சென்னை கடற்கரை வரும் பயணிகள் ரெயில், விழுப்புரம்-தாம்பரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரையில் இருந்து இன்று காலை 5.35 மணிக்கு காஞ்சீபுரம் செல்லும் மின்சார ரெயில் வாலாஜாபாத்-காஞ்சீபுரம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
* கடற்கரையில் இருந்து இன்று காலை 8.10, 9.30 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் சிங்கபெருமாள் கோவில்-செங்கல்பட்டு இடையேயும், செங்கல்பட்டில் இருந்து காலை 8.45, 9.40 ஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு-சிங்கபெருமாள் கோவில் இடையேயும் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
* கடற்கரையில் இருந்து இன்று காலை 8.50, 10 மணி ஆகிய நேரங்களில் செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் காட்டாங்குளத்தூர்- செங்கல்பட்டு இடையேயும், செங்கல்பட்டில் இருந்து காலை 10.40, 11.35 மணி ஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு-காட்டாங்கொளத்தூர் இடையேயும் பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை...
* கடற்கரையில் இருந்து நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 16-ந்தேதி வரையில் காலை 11.40, மதியம் 12.40 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் சிங்கபெருமாள்கோவில்-செங்கல்பட்டு இடையேயும், செங்கல்பட்டில் இருந்து மதியம் 1.10, 2.20 ஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு-சிங்கபெருமாள் கோவில் இடையேயும் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
* கடற்கரையில் இருந்து மதியம் 12.28, 1.45 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் காட்டாங்கொளத்தூர்-செங்கல்பட்டு இடையேயும், செங்கல்பட்டில் இருந்து மதியம் 1.45, மாலை 3.05 மணி ஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு-காட்டாங்கொளத்தூர் இடையேயும் நாளை முதல் வருகிற 16-ந்தேதி வரையில் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.