சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மதுரை மண்டலத்தில் மார்ச் மாதம் பராமரிப்பு பணி நடைபெறுவதால், பகல் நேரத்தில் இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
குருவாயூரில் இருந்து சென்னைக்கு இரவு 11.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16128) ரெயில் மார்ச் 4 (நாளை), 5, 6, 7, 8, 11, 12, 13, 14, 15, 18, 19, 20, 21, 22, 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் விருதுநகரில் இருந்து மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. அதாவது, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சியை வந்தடைகிறது. மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ஊர்களுக்கு இந்த ரெயில் வராது.
மாற்றுப்பாதையில் இயக்கப்படும் இந்த ரெயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை,சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.