சென்னை,
தமிழகத்தில் 14 சிறப்பு ரெயில்களின் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக 14 சிறப்பு ரெயில்களின் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தாம்பரத்தில் இருந்து போடிநாயக்கனூருக்கு சனிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06059) செப்டம்பர் 12-ந்தேதி முதல் அக்டோபர் 24-ந்தேதி வரை 7 சேவைகளும், போடிநாயக்கனூரில் இருந்து தாம்பரத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06060) செப்டம்பர் 13-ந்தேதி முதல் அக்டோபர் 25-ந்தேதி வரை 7 சேவைகளும் நீட்டிக்கப்படுகிறது.
இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06045) செப்டம்பர் 4-ந்தேதி முதல் செப்டம்பர் 25-ந்தேதி வரை 4 சேவைகளும், கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06046) செப்டம்பர் 6-ந்தேதி முதல் செப்டம்பர் 27-ந்தேதி வரை 4 சேவைகளும் நீட்டிக்கப்படுகிறது.
மேலும், மங்களூரு சென்டிரலில் இருந்து சென்னை எழும்பூருக்கு திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06126) செப்டம்பர் 7-ந்தேதி முதல் அக்டோபர் 26-ந்தேதி வரை 8 சேவைகளும், சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு சென்டிரலுக்கு செவ்வாய்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06125) செப்டம்பர் 8-ந்தேதி முதல் அக்டோபர் 27-ந்தேதி வரை 8 சேவைகளும் நீட்டிக்கப்படுகின்றன.
போத்தனூரில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06028) செப்டம்பர் 4-ந்தேதி முதல் நவம்பர் 29-ந்தேதி வரை 39 சேவைகளும், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து போத்தனூருக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06027) செப்டம்பர் 4-ந்தேதி முதல் நவம்பர் 29-ந்தேதி வரை 39 சேவைகளும் நீட்டிக்கப்படுகிறது.
இதேபோல், திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06030) செப்டம்பர் 6-ந்தேதி முதல் நவம்பர் 29-ந்தேதி வரை 13 சேவைகளும், மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06029) செப்டம்பர் 7-ந்தேதி முதல் நவம்பர் 30-ந்தேதி வரை 13 சேவைகளும் நீட்டிக்கப்படுகிறது.
மேலும், நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06166) செப்டம்பர் 6-ந்தேதி முதல் செப்டம்பர் 27-ந்தேதி வரை 4 சேவைகளும், தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06165) செப்டம்பர் 7-ந்தேதி முதல் செப்டம்பர் 28-ந்தேதி வரை 4 சேவைகளும் நீட்டிக்கப்படுகிறது.
இதேபோல், திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06070) செப்டம்பர் 3-ந்தேதி முதல் அக்டோபர் 29-ந்தேதி வரை 9 சேவைகளும், தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06069) செப்டம்பர் 4-ந்தேதி முதல் அக்டோபர் 30-ந்தேதி வரை 9 சேவைகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன.
இந்த 14 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.