கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பயணிகள் கவனத்திற்கு... சென்னை சென்டிரல் - ஜோத்பூர் இடையே சிறப்பு ரெயில்

சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை மறுநாள் காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக, கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

ஜோத்பூர் - சென்னை கடற்கரை/சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண். 04815) வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) இரவு 9.20 மணிக்கு ஜோத்பூரில் இருந்து புறப்பட்டு மூன்றாவது நாள் இரவு 8 மணிக்கு சென்னை வந்தடையும்.

மறுமார்க்கத்தில் சென்னை சென்டிரல் - ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண். 04186) வருகிற செப்டம்பர் 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.15 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு மூன்றாவது நாள் இரவு 8.30 மணிக்கு ஜோத்பூர் சென்றடையும்.

இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை மறுநாள் (23-ந்தேதி) காலை 8 மணிக்கு தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.