தமிழக செய்திகள்

டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளே கவனம்: சென்னை - மும்பை ரெயில் 4 நாட்கள் ரத்து

சென்னை - மும்பை இடையிலான ரெயில் 4 நாட்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

சென்னை,

மும்பை கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமான சென்னை எழும்பூர் - மும்பை இடையே இயக்கப்படும் ரெயில் 4 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

முழுவதுமாக ரத்து

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை எழும்பூரில் இருந்து மும்பைக்கு ஜூலை 25 முதல் ஜூலை 28-ந் தேதி வரை காலை 6.35 மணிக்கு புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22158) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கத்தில், மும்பையில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜூலை 25 முதல் ஜூலை 28-ந் தேதி வரை இரவு 10.52 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் (22157) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.