சென்னை,
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட இருந்த சார்லப்பள்ளி - கொல்லம் வாராந்திர சிறப்பு ரெயிலின் முதல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சார்லப்பள்ளியில் இருந்து கொல்லம் செல்லும் (வண்டி எண்: 07195) சபரி சிறப்பு ரெயில், வருகிற 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.45 மணிக்கு புறப்பட இருந்தது. இணைப்பு ரெயில் பெட்டிகள் தாமதமாக வருவதால் இந்த ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், கொல்லத்தில் இருந்து சார்லப்பள்ளி செல்லும் (வண்டி எண்: 07196) சபரி சிறப்பு ரெயில், வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.55 மணிக்கு புறப்பட இருந்தது. இந்த ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இரு வழித்தடங்களிலும் தலா ஒரு சேவை என மொத்தம் 2 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த ரெயில்களில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்த பயணிகள் தங்களது பயண விவரங்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.