தமிழக செய்திகள்

பயணிகளின் கவனத்திற்கு... தென் மாவட்ட ரெயில் சேவைகளில் மாற்றம்

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரம் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 21-ந்தேதி வரை திருநெல்வேலி- சென்னை எழும்பூர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 6.25 மணிக்கு தாம்பரம் அடைந்ததும் அங்கு நிறுத்தப்படும்.

இதே போல் ராமேசுவரம்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (திங்கட்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை காலை 7.10 க்கு தாம்பரத்தில் நிறுத்தப்படும். சென்னை எழும்பூர்- செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 7-ந்தேதி முதல்22-ந்தேதி வரை இரவு 8.05 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

சென்னை எழும்பூர்-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் 7-ந்தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்தில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்படும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார்.