தமிழக செய்திகள்

தீபாவளியையொட்டி கொடைக்கானல் செல்பவர்கள் கவனத்திற்கு... ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என அறிவிப்பு

தொடர் விடுமுறையை கொண்டாட மக்கள் சுற்றுலா தளங்களுக்கு அதிக அளவில் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திண்டுக்கல்,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்ல ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட மக்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். இதனிடையே, தீபாவளிக்கு மறுநாள்(9-ந்தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், தொடர் விடுமுறையை கொண்டாட மக்கள் சுற்றுலா தளங்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொடைக்கானல்

அந்த வகையில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், வாகன நெரிசல் மற்றும் கால தாமதத்தை தவிர்க்க பில்லர் ராக், குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட் ஆகிய இடங்களுக்கு செல்ல ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட வன அலுவளர் தெரிவித்துள்ளார்.

மேலும் தீபாவளி அன்று(8-ந்தேதி) மட்டும் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தளங்களை மதியம் 2 மணி வரை மட்டுமே பார்வையிட அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT