சென்னை,
பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஆஸ்திரியாவின் வோர்கல் நகரில் நடைபெற்ற 'ஐரோப்பிய ட்ராக் சீரிஸ் 2026' ஸ்கேட்டிங் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஆனந்த்குமார், '500 மீ ஸ்பிரின்ட்' மற்றும் '10 ஆயிரம் மீட்டர் எலிமினேஷன்' போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும், உலகப் புகழ்பெற்ற இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டு இளைஞர்கள் மேலும் பல உலக சாதனைகளைக் குவித்து இந்திய நாட்டிற்குப் புகழைத் தேடித்தர வேண்டும். தமிழ்நாடு அரசு அதற்காக அனைத்து வகையிலும் துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.