தமிழக செய்திகள்

மாத உதவி தொகையாக ரூ.3000 வழங்க வேண்டும்... தமிழக அரசுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை

“தமிழக அரசுக்கு தான் வெற்றிபயணம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எல்லாம் தோல்வி பயணம்” என்று ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்,

மாத உதவி தொகையாக ரூ.3000 வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு மகளிர்களுக்காக வெற்றிப்பயணம் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் வந்த நாளிலிருந்தே ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் இணைந்து தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் வெற்றிப்பயண திட்டத்தால் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும், தினமும் ரூ.100 , ரூ.200 கிடைக்காமல் தவித்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளர். இதனை தமிழக அரசு கருத்தில் கொண்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மாத உதவி தொகையாக ரூ.3000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசுக்கு தான் வெற்றிபயணம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எல்லாம் தோல்வி பயணம் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT