திருத்தணி,
திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில், அடுத்த மாதம் 1, 8, 15, 22, 24 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மலைக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அந்த 6 நாட்களிலும் மலைக்கோவில் மீது ஆட்டோக்கள் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மேலும், இடவசதிக்கு ஏற்ப கார்கள் மட்டும் மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்படும். மலைக்கோவில் நுழைவுப் பகுதியில் இருந்து படா செட்டிகுளம் வரை பக்தர்கள் கோவில் பஸ்களில் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
அதேபோல், இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் மலைக்கோவிலுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.