திருத்தணி,
திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்த தினத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்பதால் நாளை மலைக்கோவில் மேல் ஆட்டோக்கள் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இட வசதிக்கேற்ப கார்கள் இயக்கப்படும். மலைக்கோவில் நுழைவுப் பகுதியில் இருந்து படா செட்டிகுளம் வரை பக்தர்கள் கட்டணமின்றி கோவில் பஸ்களில் பயணம் செய்யலாம். இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் மலைக்கோவில் மேல் செல்ல அனுமதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.