சென்னை,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முடியாத சூழலில், அவர் வகித்த பதவியின் அடிப்படையில் சட்டப்பேரவையில் அவரின் உருவப்படத்தை திறந்தது தவறில்லை என்றாலும், இம்முடிவு சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து எடுக்கப்பட வேண்டிய முடிவு என்றே நான் கருதுகிறேன். எல்லோரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்ற முறையில் நாம் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவும் நாளைய தலைமுறையினரை பாதிக்காமல் இருக்க வேண்டுமானால் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டமன்ற வளாகத்திலோ, அரசு அலுவலகங்களிலோ தவிர்ப்பது வருங்கால ஜனநாயகத் தலைமுறையினருக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும் என்றே நான் கருதுகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.