தமிழக செய்திகள்

கொடைக்கானலில் பேரிடர் கால மீட்புப் பணிகள் குறித்து விழிப்புணர்வு!

உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்புவது குறித்து ஒத்திகை செய்தனர்.

கொடைக்கானல்,

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பேரிடர் கால மீட்புப் பணிகள் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழையையொட்டி தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் அரக்கோணத்தில் இருந்து கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். இந்தநிலையில் அக்குழுவினர் சார்பில் கொடைக்கானலில் புயல் தாக்கம் மற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டால் பொதுமக்களை மீட்பது குறித்த பேரிடர் மீட்பு ஒத்திகை, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

ஒத்திகை

அப்போது பேரிடர் மேலாண்மை குழுவினர் நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த கட்டிடத்தில் இருப்பவர்களை கண்டறிவது, அவர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்வது. அதன்பிறகு கட்டிட சுவர்களை எந்திரம் மூலம் உடைத்து உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்புவது குறித்து ஒத்திகை செய்து அசத்தினர். இந்த நிகழ்ச்சியை கொடைக்கானல் ஆர்.டி.ஓ. டியூக் பார்க்கர், தாசில்தார் நந்தகோபால், தீயணைப்பு அலுவலர் கோபால் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT