அரூர்:
அரூரில் காவல்துறை சார்பில் பெண் குழந்தை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு துணை காவல் கண்காணிப்பாளர் பெனசீர் பாத்திமா வரவேற்று பேசினார். பாலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் முகாமை தொடங்கி வைத்து பேசினார். இதில் தன்னம்பிக்கை பேச்சாளர் டாக்டர் ஜெகன் கலந்துகொண்டு பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு முறைகள், பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள், அறிமுகம் இல்லாத நபர்களிடம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கி கூறி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, மாவட்ட கல்வி அலுவலர் ரவி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் செல்வம் மற்றும் போலீசார், பொதுமக்கள், அரசு பெண்கள் பள்ளி, வாச்சாத்தி பள்ளி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.