குலசேகரன்பட்டினம்:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதன்படி குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான போலீசார் குலசேகரன்பட்டினம் மாடசாமிபுரம் பகுதியில் இளைஞர்கள் உட்பட பொதுமக்களிடமும் மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலமாக கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் குறித்தும், குழந்தை திருமண தடைச் சட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம் குறித்து எடுத்துரைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் குற்றங்கள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம் என்ற அடிப்படையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.