சென்னை,
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி தொலைநோக்கு பார்வையிலான தலைமையின் கீழ், பாரதம் 12 ஆண்டுகால மாற்றத்தை உருவாக்கும் நிர்வாகத்தை கொண்டாடும் வேளையில், தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் சென்னையில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைத்தல் மற்றும் நிலையான உணவு பழக்கவழக்கங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
சத்தான உணவுமுறை, பாரம்பரிய இந்திய உணவு ஞானம், சிறுதானியங்கள் மற்றும் வளங்களை சிக்கனமாக பயன்படுத்துதல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை, மத்திய மந்திரி கிஷன் ரெட்டி மற்றும் மகளிர் அணி தொண்டர்களுடன் இணைந்து மீண்டும் உறுதிப்படுத்தினோம்.
சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பு வெறும் உடல்நலம் சார்ந்த முயற்சி மட்டுமல்ல; அது ஆரோக்கியமான குடும்பங்கள், வளங்களை பாதுகாத்தல், தன்னிறைவு மற்றும் வலிமையான பாரதம் ஆகியவற்றை நோக்கிய ஒரு மக்கள் இயக்கமாகும். பெண் சக்தியின் வலிமையை கொண்டு, இந்த செய்தியை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்ப்பதுடன், ஆரோக்கியமான நாளைய வாழ்விற்கான அர்த்தமுள்ள வாழ்க்கை முறை மாற்றங்களையும் ஊக்குவிப்போம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.