சென்னை,
தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி. தலைவர் மு. பன்னீர்செல்வம் ஆயுத பூஜை திருநாள் வாழ்த்துகள் தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி, தலைவர் மு.பன்னீர்செல்வம் விடுத்துள்ள ஆயுத பூஜை திருநாள் நல்வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
அனைவருக்கும் ஆயுத பூஜை திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் உழைப்பவரே உயர்ந்தவர் என்கிற தத்துவத்திற்கும் அந்த உழைப்பிற்கு துணையாகயிருந்த கருவிகள், ஆயுதங்களுக்கு பூஜை செய்து நன்றி கூறி இறைவனிடம் வைத்து வணங்கும் திருநாள் ஆயுத பூஜையாகும்.
அதே போன்று கல்வி, கலை,இசை, ஞானம் மற்றும் அறிவியலுக்கும் தெய்வமாக விளங்கும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி முப்பொரும் தேவிகளை மனதார வணங்கி ஒவ்வொரு செயலிலும் இறையருள் துணை நின்று அனைவரின் வாழ்விலும் வெற்றியையும் வளங்களையும் கொழிக்க வேண்டும் என்று இத்திரு நாளில் வாழ்த்துக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.