தமிழக செய்திகள்

ஆயுத பூஜை: விமானக் கட்டணம் கிடு கிடு உயர்வு

விழாக்காலங்களில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துச் செல்வது வழக்கம்.

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னையில் வசித்து வரும் மக்கள் விழாக்காலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துச் செல்வது வழக்கம். அதன்படி, வருகிற 19-ந் தேதி ஆயுதபூஜை, 20-ந் தேதி விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன.

இதனால், அரசு ஊழியர்களுக்கு 17-ந் தேதி (நாளை) சனிக்கிழமை முதல் 20-ந் தேதி வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பெரும்பாலான மக்கள் இன்று தங்கள் ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டிருப்பார்கள். இதைக் கருத்தில் கொண்டு விமானங்களில் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

சென்னை - தூத்துக்குடி இடையே சாதாரண நாள் கட்டணம் ரூ.7,201; இன்றைய கட்டணம் ரூ.17,363, சென்னை - மதுரை இடையே சாதாரண நாள் கட்டண ரூ.5,066; இன்று விமானக் கட்டணம் ரூ.8,527

சென்னை - கோவைக்கு ரூ.16,601; சென்னை திருச்சிக்கு ரூ.9,896 இன்று விமானக் கட்டணம் நிரணயிக்கப்பட்டுள்ளது. சென்னை - கோவை வழக்கமான கட்டணம் ரூ.4,966 இன்றைய கட்டணம் ரூ,16,234, சென்னை - சேலம் வழக்கமான கட்டணம் ரூ.4,001, இன்றைய கட்டணம் ரூ.12,132 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து கொச்சிக்கு ரூ.18,255, பெங்களூருவுக்கு ரூ.18,041ஆக விமானக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை - ஹைதராபாத் இடையே சாதாரண நாள் கட்டணம் ரூ.4,467; இன்றைய கட்டணம் ரூ.21,665 ஆக உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT