தமிழக செய்திகள்

கோயம்பேட்டில் நாளை முதல் ஆயுதபூஜை சிறப்பு சந்தை!

தமிழகத்தில் ஆயுதபூஜை பண்டிகை வருகிற 19-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.

சென்னை,

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு சந்தையில் நாளை முதல் சிறப்பு சந்தை செயல்பட உள்ளது. இங்கு அவல், பொரி, வாழைக்கன்று, தோரணம், பூசணிக்காய் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.

ஆயுதபூஜை

தமிழகத்தில் ஆயுதபூஜை பண்டிகை வருகிற 19-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் கருவிகள், எந்திரங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்து பூஜை செய்வது வழக்கம்.

மேலும், கல்வி உபகரணங்கள், தொழில் கருவிகள் ஆகியவற்றை வைத்து வழிபாடு நடத்துவதுடன், வீடுகளிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதற்காக அவல், பொரி, பழங்கள், பூக்கள், வாழைக்கன்று, தோரணம், பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் வாங்குவது வழக்கம்.

சிறப்பு சந்தை

ஆயுதபூஜையை முன்னிட்டு, கோயம்பேடு சந்தையில் பூஜைப் பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, கோயம்பேட்டில் நாளை முதல் அக்டோபர் 23-ந்தேதி வரை சிறப்பு சந்தை செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிறப்பு சந்தையில் ஆயுதபூஜைக்கு தேவையான அவல், பொரி, வாழைக்கன்று, தோரணம், பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும். பண்டிகைக்குத் தேவையான பொருட்களை ஒரே இடத்தில் வாங்கிச் செல்லும் வகையில் இந்தச் சந்தை அமையும்.

SCROLL FOR NEXT