சிறப்பு ரெயில் 
தமிழக செய்திகள்

ஆயுதபூஜை ஸ்பெஷல்: பெங்களூரு - திருவனந்தபுரம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில்

சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (அக்.14) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை,

ஆயுதபூஜையை முன்னிட்டு பெங்களூரு - திருவனந்தபுரம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெங்களூரு கன்டோன்மெண்டில் இருந்து

பெங்களூரு கன்டோன்மெண்டில் இருந்து அக்டோபர் 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06575) மறுநாள் காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.

திருவனந்தபுரத்தில் இருந்து

மறுமார்க்கத்தில், திருவனந்தபுரம் வடக்கில் இருந்து அக்டோபர் 17-ந் தேதி (சனிக்கிழமை) மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06576) மறுநாள் காலை 6 மணிக்கு பெங்களூரு கன்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தை சென்றடையும்.

டிக்கெட் முன்பதிவு

20 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (அக்.14) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT