தமிழக செய்திகள்

ஆயுதபூஜை ஸ்பெஷல்: சென்னை - சாலிமர் இடையே சிறப்பு ரெயில்

22 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயிலுக்கு நாளை காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.

சென்னை,

ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னை - சாலிமர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மேற்கு வங்க மாநிலம் சாலிமரில் இருந்து அக்டோபர் 15 மற்றும் 22-ந் தேதிகளில் (வியாழக்கிழமை) இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 02841) 3-வது நாள் அதிகாலை 3 மணிக்கு சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தை வந்தடைகிறது.

மறுமார்க்கத்தில், சென்னை கடற்கரையில் இருந்து அக்டோபர் 17 மற்றும் 24-ந் தேதிகளில் (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (02842) மறுநாள் மதியம் 1.45 மணிக்கு சாலிமரை சென்றடையும்.

22 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயிலுக்கு நாளை (அக்.10) காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT